
கடந்த 55 வருடங்களுக்கு மேலாக கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவில் பிரதம குருவாக இருந்து விநாயகரின் நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகளை சிறப்புடன் நடத்தி ஊர்அடியவர்களின் பெரும்மதிப்புக்குரிய சிவஸ்ரீ. தா. ஹரிஹரசுப்பிரமணியக் குருக்கள் (மணி ஐயா) அவர்கள் தமது உடல் சுகயினம் காரணமாக தமது பிரதம சிவாச்சாரியார் பதவியில் இருந்து இன்று (14.07.2016) ஓய்வு பெற்றார்.
இவருக்கு பதிலாக நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகளை தொடர்ந்து நடத்துவதற்காக முன்பு எமது ஆலயத்தில் உதவிக் குருவாக நீண்டகாலம் இருந்த சிவஸ்ரீ ஆ.சௌந்தர்ராஜா குருக்கள் அவர்கள் தற்காலிக குருவாக பரிபாலன சபையினரால் இன்று (14.07.2016) நியமிக்கப்பட்டுள்ளார்.